சென்னை எழும்பூரில் மறு சீரமைப்புப் பணிகள் காரணமாக தென் மாவட்டங்களுங்கு இயக்கப்படும் மேலும் சில ரயில்கள் ஏப்ரல் 6 வரை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல சில குறிப்பிட்ட ரயில்கள் எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலேயே நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில் குறித்த விவரங்களை, பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு NTES செயலில் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேரம் மாற்றம்!
சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8 மணிக்குப் பதிலாக வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி வரை இரவு 10.15 மணிக்குப் புறப்படும்.
எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம்!
ஏற்கெனவே தென் மாவட்ட ரயில்கள் பலவும் சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் நிலையில் மேலும் சில ரயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6 வரை கீழ்குறிப்பிட்ட ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (22661) எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 6.22க்குப் புறப்படும்.
அதேபோல , சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12661) இரவு 8.02க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (20635) தாம்பரத்தில் இருந்து இரவு 8.17க்கும்
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16751) தாம்பரத்தில் இருந்து இரவு 9.02க்கும்
சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.57க்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள்
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் சில ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தம்பரத்திலேயே நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (16866),
கொல்லம்- சென்னை எழும்பூர் அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (20636),
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் நெல்லை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12632),
ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (22662),
ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16752) ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Summary
Changes in train service: 10 more trains will operate from Tambaram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

எழும்பூரில் நாளை(ஏப். 3) அதிகாலை முதல் வழக்கமான புறநகர் ரயில் சேவை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



