தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுகவினரின் சர்ச்சைப் பேச்சு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :18 மார்ச் 2026, 11:58 am

சொல்வதற்குச் சாதனைகளும் செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அரசியல் மற்றும் பெண் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?

எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!

மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!

தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.