மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?

அதிமுக - பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :18 மார்ச் 2026, 6:46 am

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை(மார்ச் 19) சென்னை வருகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்தும் கட்சிகளிடையே மும்முரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக - பாஜக இடையே ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் பியூஷ் கோயல் நாளை(மார்ச் 19) சென்னை வரவுள்ளார். இதனிடையே இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

மார்ச் 20 ஆம் தேதி அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் இந்த வாரத்தில் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தது 30 தொகுதிகளையாவது பெறும் என்றும் சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளைப் பெற முனைப்பு காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Piyush Goyal to visit Chennai tomorrow; Is the AIADMK-BJP seat sharing finalised?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.