தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் துறையினர் 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!

காவல் துறையினர் 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பாக..

News image

உயிரிழந்த ஆகாஷ்.

Updated On :17 மார்ச் 2026, 6:08 am

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறையினர் 11 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மானாமதுரையில் ஜெயக்குமாா், அழகர் ஆகிய இருவரும் வாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கைது செய்யப்பட்டார். போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது இவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து 5 நாள்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பின்னர், இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளராகப் பணியாற்றிய திலீபன், உதவி ஆய்வாளர் குகன், போலீஸார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகிய 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, மானாமதுரை காவல் ஆய்வாளா் குமாரவேல் பாண்டியனை, நெல்லை காவல் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி உத்தரவிட்டார். இதேபோல, தனிப்பிரிவு காவலா் முனீஸ், மதுரை மாவட்டத்துக்கும்பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி ராஜா, தனிப்பிரிவு எஸ்ஐ முத்துராஜா, காவலர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 11 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் அடிப்படையில் மற்றவர்களை வழக்கில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The CBCID police have summoned 11 police officers in connection with the incident in which Akash died during a police investigation in Manamadurai, Sivaganga district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.