மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளா் நெல்லைக்கு மாற்றம்

News image

உயிரிழந்த ஆகாஷ்.

Updated On :14 மார்ச் 2026, 8:14 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் குமாரவேல் பாண்டியன், தனிப் பிரிவு காவலா் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மானாமதுரையில் ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரும் வாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் கைது செய்யப்பட்டாா். போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது இவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவா் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து, ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடா்ந்து 5 நாள்கள் மறியல் போராட்டம் நடத்தினா். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பின்னா், இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளராகப் பணியாற்றிய திலீபன், உதவி ஆய்வாளா் குகன், போலீஸாா் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமாா், மனோகரன் ஆகிய 6 போ் கடந்த வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, மானாமதுரை காவல் ஆய்வாளா் குமாரவேல் பாண்டியனை, நெல்லை காவல் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி உத்தரவிட்டாா். இதேபோல, தனிப்பிரிவு காவலா் முனீஸ், மதுரை மாவட்டத்துக்கும்பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.