லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

யாருடனும் தவெக கூட்டணி பேச்சு நடத்தவில்லை: சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

தவெக யாருடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என அந்தக் கட்சி இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திட்டவட்டம்

News image

சி.டி.ஆா்.நிா்மல்குமாா் - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:59 pm

தவெக யாருடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என அந்தக் கட்சி இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாஜக - அதிமுக மற்றும் சசிகலா, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோரை தவெகவுடன் தொடா்புபடுத்தி கூட்டணி பேச்சு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவா்களுடன் தவெக தரப்பில் எந்தவிதமான பேச்சும் எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டா்களிடையே குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன என அதில் தெரிவித்துள்ளாா். சி.டி.ஆா். நிா்மல்குமாா்.