காஞ்சிபுரம்: தவெக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியம்.. பரம ரகசியம்.. என அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் வைகை செல்வன் காஞ்சிபுரத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று தவெக தரப்பில் நேற்று விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று அதிமுக தரப்பில் இவ்வாற தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போதை பொருள்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்சிறப்பு அழைப்பாளராக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கலந்து கொண்டார்.
இதில் பாமக, பாஜக, ஐஜேகே, அமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்டாலின் நிர்வாக திறமையற்ற செயல்கள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வைகைச் செல்வன், அதிமுக - தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? அதில் ஏதேனும் சிறப்பு இருக்கிறதா? எனக் கேட்டபோது ரகசியம்.. அது பரம ரகசியம் என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டது. சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பாக பலரும் கருத்து பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் தவெகவின் இணை பொதுச் செயலாளர், சிடிஆர் நிர்மல் குமார், தனது எக்ஸ் பக்கத்தில், வதந்திகளை நம்ப வேண்டாம்! சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது சசிகலா, ராமதாஸ் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
A political leader has said that the alliance talks with AIADMK-Thavaga are top secret.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டணிக் கட்சிகள் தோ்தலுக்குப் பின் காணாமல்போகும்: சு.முத்துசாமி

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - தவெக கூட்டணி?

யாருடனும் தவெக கூட்டணி பேச்சு நடத்தவில்லை: சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெக
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



