மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மே 4-ல் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - யூடியூப் / Election Commission of India

Updated On :15 மார்ச் 2026, 11:15 am

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 4 ஆம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

5 மாநிலங்களிலும் சேர்த்து 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் பணிகளில் 25 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாடு வாக்குச் சாவடிகள்

தமிழ்நாட்டில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகள், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தகுதியான வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் செல்போன்கள் பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும்.

வாக்காளர்கள் நிலவரம்

தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி. பெண் வாக்காளர்கள் 2.89 கோடி. மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.

தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.

20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடியாக உள்ளது.

Summary

Tamil Nadu kerala assam west bengal puducherry election vote counting on May 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.