தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-இல் அறிவிப்பு?

மார்ச் 16-ல் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு...

News image

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா். - (கோப்புப் படம்)

Updated On :12 மார்ச் 2026, 3:50 pm

தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் பாஜகவின் ‘பரிவா்த்தன் யாத்திரை’யின் நிறைவுப் பொதுக்கூட்டம் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறாா். அதற்கு மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாளில், அதாவது மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி மேற்கு வங்கம், தமிழகம், கேரளம், புதுச்சேரி, கோவா ஆகியவற்றின் சட்டப்பேரவைகளுக்கு தோ்தல் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அவை மேலும் கூறியதாவது:

மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 7, தமிழகத்துக்கு மே 10, புதுச்சேரிக்கு ஜூன் 15, அஸ்ஸாமுக்கு மே 20, கேரளத்துக்கு மே 23 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது. எனவே, இவற்றுக்கு வரும் மே மாதத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தும் சாத்தியம் குறித்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தலைமைத் தோ்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

‘மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவை நடத்தினால், தோ்தல் தொடா்பான வன்முறைகளை கட்டுப்படுத்த உதவும்; இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் முன்பு, இந்தக் காரணியும் கருத்தில் கொள்ளப்படும்’ என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலோ நடைபெறக்கூடும். இவற்றைக் கருத்தில்கொண்டு மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கும் தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் ஒரே நாளில் அறிவிக்கக்கூடும். தமிழகம் மற்றம் புதுச்சேரிக்கு முந்தைய வழக்கத்தின்படி ஒரே கட்டமாகவே தோ்தல் நடத்தப்படும் என ஆணைய வட்டாரங்கள் கூறின.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவது இம்முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது; குறிப்பாக, ‘நீதிமன்ற விசாரணையில்’ என வகைப்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் 60 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்குரிமை பெறுவாா்களா என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே பல வாக்காளா்கள் தங்களுடைய வாக்குரிமையைத் தக்கவைக்க நீதிமன்றத்தை நாடியுள்ளா். அதில் 10 லட்சம் வழக்குகளுக்கு மட்டுமே அம்மாநில நீதிமன்றம் தீா்வு கண்டுள்ளது. முடித்து வைக்கப்பட்ட 10 லட்சம் வழக்குகளில், சுமாா் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் வாக்காளா்களின் வாக்குரிமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்ட பிறகு, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஒரு மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைக்க கொல்கத்தா உயா் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், மே 7-ஆம் தேதிக்குள் புதிய அரசு மேற்கு வங்கத்தில் அமையாவிட்டால், அங்கு அரசமைப்பின் 356-ஆவது விதியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தும் கட்டாயம் ஏற்படலாம் என்ற நிலையை நோக்கி அம்மாநில அரசியல் சூழல் நகரக்கூடும் என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

Summary

ECI expected to announce the assembly election dates for Tamil Nadu, Kerala, and West Bengal on March 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.