தமிழகம், கேரளம் உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரவை தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அப்போது, தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். இதையடுத்து, ரொக்கமாக ரூ.50,000-க்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் கட்டாயம் என்பது உள்ளிட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அவர் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவை பதவிக்காலம் அஸ்ஸாமில் மே 20-ஆம் தேதியும், தமிழகத்தில் மே 10-ஆம் தேதியும், புதுச்சேரியில் ஜூன் 15-ஆம் தேதியும், கேரளத்தில் மே 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் மே 7-ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் 234, கேரளத்தில் 140, புதுச்சேரியில் 30, அஸ்ஸôமில் 126, மேங்கு வங்கத்தில் 294 என மொத்தம் உள்ள 824 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அஸ்ஸôம், கேரளம், புதுச்சேரிக்கான தேர்தல் அறிவிக்கை மார்ச் 16-ஆம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கும். தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 30-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 6-ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 9-ஆம் தேதி ஆகும். ஏப்ரல் 23-இல் வாக்குப் பதிவு நடைபெறும்.
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 30-ஆம் தேதியும், 2-ஆம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை ஏப்ரல் 2-ஆம் தேதியும் வெளியிடப்படும். ஏப்ரல் 23, 29-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இடைத் தேர்தல்: கோவா, கர்நாடகம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதியும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதியும் நடைபெறும். இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.
நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி பேரவைத் தேர்தலில் 17.40 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள், புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள், கேரளத்தில் 2.70 கோடி வாக்காளர்கள், மேற்கு வங்கத்தில் 6.44 கோடி வாக்காளர்கள், அஸ்ஸôமில் 2.50 கோடி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்த வாக்காளர்களின் தரவுகள் எஸ்ஐஆர் இறுதி வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையிலானவை. தேர்தல் நடைமுறைகள் மே 6-ஆம் தேதி முடிவடையும்.
2.19 லட்சம் வாக்குச் சாவடிகள்: தேர்தலையொட்டி மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் மொத்தம் 25 லட்சம் அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். தமிழகத்தில் 75,032 வாக்குப் பதிவு மையங்களும், புதுச்சேரியில் 1,099 மையங்களும், கேரளத்தில் 30,471 மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இந்த தேர்தல் பணிகளில் மொத்தம் 25 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதில் வாக்குப் பதிவு மையங்களில் 15 லட்சம் பேரும், பாதுகாப்பில் 8.50 லட்சம் பேரும், வாக்குப்பதிவு நுண்பார்வையாளர்களாக 49 ஆயிரம் பேரும், தேர்தல் பார்வையாளர்களாக 1,444 பேரும், வாக்கு எண்ணிக்கைப் பணியில் 40ஆயிரம் பேரும், வாக்கு எண்ணிக்கைக்கான நுண்பார்வையாளர்களாக 15 ஆயிரம் பேரும் இடம்பெற்றுள்ளனர்.
வசதிகள்: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை, தகவல் பலகைகள், சாய்வுப்பாதை, சக்கர நாற்காலிகள், உதவி மேஜை உள்ளிட்ட ஏற்பாடு செய்யப்படும். வாக்குச்சாவடிகளில் கைப்பேசியை பாதுகாப்பதற்கான வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும், அமைதியான முறையிலும் பாரபட்சமற்ற வகையிலும் நடத்த தேர்தல் அலுவலர்களுக்கும், காவல் துறை, அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
வேட்புமனுத் தாக்கல் - மார்ச் 30
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 6
வேட்புமனு பரிசீலனை - ஏப்ரல் 7
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - ஏப்ரல் 9
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை - மே 4
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
5 மாநிலங்களிலும் சேர்த்து 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் பணிகளில் 25 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாடு வாக்குச் சாவடிகள் நிலவரம்
தமிழ்நாட்டில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகள்.
கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள்.
தமிழ்நாடு வாக்காளர்கள் நிலவரம்
தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி.
பெண் வாக்காளர்கள் 2.89 கோடி.
மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.
தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.
20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடியாக உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தகுதியான வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் செல்போன்கள் பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்கள் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேட்டுக்கொண்டார்.
Summary
Chief Election Commissioner Gyanesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரசாரம் நிறைவு! சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

எஸ்என்யு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்போர் கவனத்துக்கு...

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: புதுச்சேரி அரசு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



