மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

அதிமுகவில் காளியம்மாள் இணைந்தது பற்றி...

News image

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

Updated On :13 மார்ச் 2026, 5:11 am

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை நேரில் சந்தித்த காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் பேசியதாவது:

”சாதாரண குடும்பத்தில் இருந்து அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழனின் தலைமை கீழ் செயல்படவுள்ளேன். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என மக்கள் ஒவ்வொரு நாளும் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். இந்த தேர்தல் மாற்றத்தை கொடுக்கும்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தலைமை முடிவு செய்யும். அதிமுகவின் 2010-ஆம் ஆண்டு மாவட்டப் பொறுப்பில் இருந்துள்ளேன். தற்போது கட்சி தலைமை முடிவு செய்து பொறுப்பு வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 2019 மக்களவைத் தேர்தலில் சென்னை வடக்கு தொகுதியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.

Summary

Kaliyammal joined AIADMK!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.