தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, கடந்த ஐந்தாண்டுகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதுதொடர்பாக உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டம்-ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக ஒரு செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்தித்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2025 ஆம் ஆண்டில் 1,461 வழக்குகளாகக் குறைந்துள்ளன.
பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். இதனால், போக்சோவில் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.
காவல் நிலைய மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது. இதில், அரசு வெளிப்படையாக உள்ளது. சிறிய குற்றங்கள் என்றாலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் வெளிப்படைத்தன்மை என்ன? அரசின் நிலைப்பாடு என்ன? மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.
சிபிசிஐடி அவ்வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்மந்தப்பட்டவர்கள் காவல் துறையினர் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐக்கு வழக்கை அரசு மாற்றியது. 2021 ஆம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2024 ஆம் ஆண்டு 11,000 வழக்குகளாக அதிகரித்துள்ளன. போதைப் பொருள் தடுப்புப் பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியதாலேயே இந்த வழக்குகள் அதிகரித்துள்ளன.
காவல் நிலையத்துக்கு வரும் மக்களை எவ்வாறு அணுக வேண்டும். விசாரணையை எப்படி நடத்துவது என காவல் நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கையில் ஆகாஷ் என்பவர் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கோயில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அசம்பாவித சம்பவங்கள் நேரிடாமல் தடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார் தீரஜ்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொலைகள்! இதில் 1,977 பெண்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


