மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) கலந்துகொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில், திமுக ஆட்சியை விமர்சித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மேற்காசிய போர் விவகாரம் குறித்தும் அதனால், நாட்டில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் பிரதமர் பேசியதாவது:
''மேற்காசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இந்தப் போரானது சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன.
எந்தவொரு சூழலிலும் இந்திய மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் எத்தகைய சிறந்த தேசம் என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்தோம். அதேபோன்று இந்த சூழலையும் வெற்றிகரமாகக் கடந்து செல்வோம்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வளர்ச்சி, நாணயமான உழைப்பை நோக்கி ஒரு பாதை அழைத்துச் செல்கிறது. மோசடி, போதைப் பொருள், ஏமாற்றத்தை நோக்கி மற்றொரு பாதை (திமுக) அழைத்துச் செல்கிறது.
மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவோம்.
தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது'' என பிரதமர் மோடி பேசினார்.
Summary
Gas shortage People should not panic Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!

தேவெ கெளடா, கார்கே, சரத் பவாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! பிரதமர் மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


