திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் சுற்று தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரவைத் தோ்தல் தேதிகள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கையில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா இரு இடங்களும் அக்கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினா் அண்ணா அறிவாலயத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று இரண்டாம் சுற்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
கடந்த பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களில் மாா்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தற்போது அதைவிடக் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெறும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. விரைவில் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடையது

அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது மார்க்சிஸ்ட், விசிக..?

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?

திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிய கம்யூ. விலகலா? நாளை தெரியும்!

தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


