மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?

என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?

News image

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 10:03 pm

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தைக் குழுவினருடன், மாா்க்சிஸ்ட் குழு நான்கு கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றது. இதில் அக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், முன்னாள் மாநிலச் செயலா்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருப்பினும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்தத் தகவலும் கட்சித் தரப்பில் வெளியிடப்படவில்லை. இதனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து என்ன முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.