மேற்காசியப் போர் காரணமாகப் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது எனத் தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். மக்கள் நலனைக் காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில்,
“ • உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிட்சன்( Cloud Kitchen) உள்ளிட்ட உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் சிலிண்டர்களுக்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்!
• சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
• தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் எல்பிஜி, சிஎன்ஜி போன்ற எரிபொருள்களுக்கு மாற்றாக மண்ணெண்ணெய், மாற்று எரிபொருட்களில் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட எரிபொருள் (RDF) மற்றும் அதிவேக டீசல் (HSD), பயோமாஸ் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
• இந்த இடர்ப்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினைப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பெற்றுக்கொள்ள ஆணை.
• உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
• மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்பிஜி சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க, தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில், அரசு உயர் அலுவலர்கள் கொண்டகுழு.
• மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு.
இந்த மாதம் பொது விநியோகத் திட்டத்திற்குக் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிலிண்டர், பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரித்துள்ளதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பலர் அச்சத்தில் பிளாஸ்டிக் கேன்கள், டிரம்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்தால் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
Summary
"We have already taken measures within the scope of the Tamil Nadu government's authority to ensure that the general public is not adversely affected by the conflict in West Asia. What steps does the Central Government intend to take to safeguard the welfare of the people?" Chief Minister Stalin has asked.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

சமையல் சிலிண்டருக்காக மக்களைக் காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின்

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



