தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்னும் 2 நாள்களில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என எ.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற எ.கே. சுதீஷ் - படம் - முகநூல் / எல்.கே. சுதீஷ்

Updated On :10 மார்ச் 2026, 3:41 pm

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்னும் 2 நாள்களில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எ.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (மார்ச் 10) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதல்வருடன் புதிதாகத் தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்கள்

முதல்வருடன் புதிதாகத் தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்கள் - படம் - முகநூல் / எல்.கே. சுதீஷ்

திருச்சி சிவா தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளார். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்முறை தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் எ.கே. சுதீஷ் பேசியதாவது:

''முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றோம். தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பிய கூட்டணி அமைந்துள்ளது. 2 நாள்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

DMK DMDK seat sharing in 2 days L.K. Sutheesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.