மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

News image

காங்கிரஸ், திமுக.

Updated On :14 மார்ச் 2026, 3:49 pm

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் புதுச்சேரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் எஸ்பி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 13, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு இடங்களில் போட்டியிட்டன.

தமிழகத்தில் திமுக தலைமையில் இண்டி கூட்டணி உருவாகியுள்ளது. இக் கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை எம்.பி.யும் திமுக அளித்துள்ளது. அதேசமயம், புதுச்சேரியில் யாா் தலைமையில் கூட்டணி என்று திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Seat-sharing talks between DMK and Congress for the Puducherry Assembly elections have begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.