மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஏற்கெனவே மக்களவையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் பழமையான விமான நிலையங்களில் ஒன்று. தெற்கு தமிழ்நாட்டிற்கான ஒரு முக்கிய நுழைவுவாயிலாக இருக்கிறது. சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பல்வேறு நாடுகளை இணைக்கும். வர்த்தகத்தை, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதுடன் வணிகங்களை ஈர்க்கும் வகையில் மதுரை சர்வதேச விமான நிலையம் இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேபோல கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்வேறு பணிகளைத் தொடக்கிவைக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்ளவும் பிரதமர் மோடி நாளை திருச்சி வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Cabinet approves Declaration of Madurai Airport, Tamil Nadu, as an International Airport
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நொய்டாவில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்துக்கு ரூ.28,840 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை சர்வதேச விமான நிலையம்! அரசாணை வெளியீடு!

மதுரை விமான நிலையத்துக்கு சா்வசேத அந்தஸ்து அறிவிப்புக்கு வரவேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை




