மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக அறிவித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்ததாவது:
”மதுரை விமான நிலையத்தில் இருந்து சா்வதேச விமானங்களை இயக்க பல்வேறு விமான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த முடிவின்மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகா் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழமுதிா்சோலை முருகன் கோயில், ராமேசுவரம் ஆகிய முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கான இணைப்பு வசதிகள் மேம்படும்.
கோயில் நகரத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானப் போக்குவரத்து உறுதி செய்யப்படும்” என்றார்.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மதுரை மக்களும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மதுரை விமான நிலையத்தில் விரைவில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
Summary
Madurai International Airport! Government Order issued!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சா்வதேச விமான நிலையமாக மதுரை: அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா்

நொய்டாவில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

மதுரை விமான நிலையத்துக்கு சா்வசேத அந்தஸ்து அறிவிப்புக்கு வரவேற்பு

சர்வதேச விமான நிலையமாகிறது மதுரை விமான நிலையம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



