கரூர் பலி தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
வேட்பாளர் நேர்காணலை நாளை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே தில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் 2 முறை விசாரணை நடைபெற்றுள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.
மேலும் 110 போ் காயமடைந்தனா். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ, ஜனவரி 12ம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவா் விஜய்யிடம் முதல் சுற்று விசாரணை மேற்கொண்டது.
அன்றைய தினம் ஆறு மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடா்ந்து ஜனவரி 19 அவரிடம் இரண்டாவது சுற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஐந்தரை மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த கட்டமாக விஜய்க்கு சம்மன் கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் விஜய் நாளை மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The CBI has summoned actor and TVK chief Vijay on Tuesday for a fresh round of questioning in connection with the Karur stampede case, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெக

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

விஜய் பையில் இருந்த பொருள்? - விமான நிலையத்தில் பரபரப்பு

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



