சிபிஐ விசாரணைக்காக தில்லி புறப்பட்ட விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் சனிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய்யின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்ட விஜய், சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். விஜய்யுடன் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், உதவியாளர் ஜெகதீஷ், ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜன. 12, ஜன. 19 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா். மூன்றாவது முறையாக விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.
இந்த அழைப்பாணையின்படி செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், தவெக வேட்பாளா்கள் நோ்காணல் இருப்பதால் 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சாா்பில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்த சிபிஐ, விஜய் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்தது. இதனிடையே இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட தேதியில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Summary
A commotion occurred at the airport when Vijay, who left for Delhi for an investigation by the CBI, has a Scissors in his bag.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!
கரூா் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



