மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

முதல்வர் விஜய் வருகை; கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

முதல்வர் விஜய் வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்து...

கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு. - படம் - தினமணி

Updated On :

முதல்வர் விஜய் வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் இன்று, கோவை மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணம் கருதி கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காவல்துறையினர், பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரின் உடைமைகளையும், தீவிர பாதுகாப்பு பணிகளுடன் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். மேலும் விமான நிலையம் முகப்பு பகுதியில் காவல்துறையினர் விமான நிலையம் உள்ளே செல்லும் வாகனங்களையும் தணிக்கை செய்து அனைத்து வாகனங்களின் பதிவுகளையும் சேகரித்து என்னென்ன காரணத்திற்காக அவர்கள் விமான நிலையம் செல்கிறார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வருகின்ற தமிழக முதல்வர் விஜய், விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் மூலமாக தாராபுரம் செல்ல இருக்கிறார்.

தாராபுரத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்க அங்கு பிரத்யேக ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து முதல்வருக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக வாகனத்தில் ஏறி நின்றபடி சாலைவல நிகழ்ச்சியில், அவர் பங்கேற்க்க இருக்கிறார். இதற்காக சுமார் 3000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த முறை அவர் வந்த பொழுது காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்பு அறன்களையும், மீறி இளைஞர்கள், முதல்வரின் வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் இந்த முறை அத்தகைய செயல் நடைபெற கூடாது என்பதற்காக, காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவை மாவட்டத்தில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், ஹோப்ஸ் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர் புற காவல் நிலையம், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, சூலூர் ஜங்சன், சூலூர் புதிய பேருந்து நிலையம், காங்கேயம் பாளையம் சந்திப்பு, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் நேற்று (அக். 3) நள்ளிரவு 01.00 மணி முதல் நாளை (செப். 5) காலை 09.00 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் என்றழைக்கபடும் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகள் பறப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகளை காவல்துறையினர் மாநகர் முழுவதும் ரோந்து வாகனங்களில் சென்று சோதனை செய்து வருகின்றனர்.

Summary

Heavy police security has been deployed at the Coimbatore airport on Sunday (Oct. 4) in view of Chief Minister Vijay's arrival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.