தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸுக்கு 28 + 1! கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2026, 2:58 pm

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் மனநிறைவு ஏற்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு செய்தியாளகளுடான சந்திப்பில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

''சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் பேச்சுவார்த்தைக்கு வந்தோம். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையிடம் பேசினோம். பின்னர் இருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. பல கட்சிகள் இரண்டு அல்லது மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் தாமதம் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் மன நிறைவுடன் இருக்கிறோம். போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்'' எனக் கூறினார்.

Summary

Contentment in alliance distribution Selvapperunthakai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.