சட்டபேரவைத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று (மார்ச் 4) கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.
இதற்கு முன்பு டி.ஆர். பாலு தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சி பேச்சுவார்த்தைக் குழுவுடனும், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

உடன்பாடு கையெழுத்தான அறிக்கை
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு செய்தியாளகளுடான சந்திப்பில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
''சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் பேச்சுவார்த்தைக்கு வந்தோம். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையிடம் பேசினோம். பின்னர் இருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. பல கட்சிகள் இரண்டு அல்லது மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இதில் தாமதம் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் மன நிறைவுடன் இருக்கிறோம். போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்'' எனக் கூறினார்.
Summary
DMK-Congress alliance agreement signed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் காங். 16, திமுக 12 தொகுதிகளில் போட்டி?

இனிமேலும் குழப்பாம இருங்க ப்ரோ!

சொல்லப் போனால்... காங்கிரஸ் கட்டெறும்பாவது ஏன்?

திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



