தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்

கல்விச் சிந்தனை அரங்கில் கலந்துகொண்ட அஸ்ஸாம் ரைபிள்ஸின் முன்னாள் இயக்குநர் பேசியது பற்றி...

News image

கல்விச் சிந்தனை அரங்கில்...

Updated On :2 மார்ச் 2026, 8:14 am

இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதியிருந்த புத்தகத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் எதுவும் இல்லை என அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையின் முன்னாள் இயக்குநர் செளகின் செளஹான் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையின் முன்னாள் இயக்குநர் செளகின் செளஹான், இந்திய விமானப் படையின் முன்னாள் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதெளரியா மற்றும் இந்தியாவுக்கான முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் புரி ஆகியோர் கலந்துகொண்டார்.

இதில், பாதுகாப்புத் துறை தொடர்பாக செளகின் செளஹான் பேசியதாவது:

“பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது நாங்கள் எப்போதும் பதிலடி கொடுப்போம். ஆனால், சீனாவைப் பொருத்தவரை, ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்ற நெறிமுறை இருக்கிறது.

சீன ஊடுருவலின் போது, நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்தோம். ஜெனரல் எம்.எம். நரவணே, பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் தகவல் கொடுத்துவிட்டு, அவர் செய்ய வேண்டியதைச் செய்தார். அவர் காத்திருக்கவில்லை. அவர் எழுதிய புத்தகத்தின் அந்தப் பகுதியை நான் மிகத் தெளிவாகப் படித்தேன்.

புத்தகம் குறித்து எழும் பிரச்னைகள், சர்ச்சையே இல்லாத இடத்தில் ஒரு சர்ச்சையைக் கண்டுபிடிப்பது போல் இருக்கிறது.

எந்த அரசியல் தலைவரும் ஆயுதப் படைகளுக்குள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முயற்சித்ததில்லை. எந்தக் கால கட்டத்திலும் எந்த அரசியல் தலைவரும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொன்னதில்லை” எனத் தெரிவித்தார்.

Summary

MM Naravane's book is not controversial! Former Assam Rifles director

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.