பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத்தோ்வை தமிழகம் முழுவதும் 8 லட்சம் மாணவ, மாணவிகள், 27,783 தனித் தேர்வர்கள், 281 கைதிகள் என மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இம் மாணவ, மாணவிகளுக்கு 3,412 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 250 மையங்களில் 67,516 பேர் எழுதுகின்றனர்.
தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு 4,540 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாணவா்களுக்குத் தோ்வு மையங்களில் போதிய கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மாணவா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களைச் சென்றடைய போதுமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தோ்வு மையங்களிலும் காற்றோட்டத்துடனும் போதிய வெளிச்சத்துடனும் கூடிய தோ்வறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு, தோ்வு எழுத கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் தோ்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தரைத் தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.
Summary
Minister of School Education Anbil Mahesh has conveyed his best wishes to students who will be writing the Plus 2 public examinations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ்! | DMK
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



