கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் கலந்துகொண்டார்.
இதில், இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர் குறித்து சசி தரூர் பேசியதாவது:
”இஸ்ரேல் - ஈரான் போரைப் பொருத்தவரை பல காரணங்கள் இருக்கின்றன. ஈரானுக்கு எதிராக ஈரானின் பாதுகாப்பின்மை ஒரு காரணம். இந்த தாக்குதகுக்குள் ரஷியாவும் சீனாவும் ஈடுபாத வரை மூன்றாம் உலகப் போர் ஏற்படாது.
நாம் அமைதியை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எண்ணெய் பிரச்னை தவிர, தாக்குதல் நடைபெறும் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.
கேரள அரசியல் குறித்து பேசுகையில், ”கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. வெற்றி தெளிவாகத் தெரிகிறது. தவறு செய்யாமல் இருந்தாலே போதும் வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன்.
திருவனந்தபுரத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதில் நான் மிகவும் கவனம் செலுத்துகிறேன். மற்றதெல்லாம் காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.
சென்னை உயர் நீதிமன்றம், ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை போன்றவை இன்னும் பழைய பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. கேரளம் என்ற பெயர் புழக்கத்துக்கு வர பல காலங்கள் ஆகும். கேரள மக்கள் அடிப்படையிலேயே வலுவான கலாசார பின்னணி கொண்டவர்கள். கரோனா, மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டு, அதிலிருந்து மீண்டனர்” எனத் தெரிவித்தார்.
Summary
Congress alliance will win in Kerala! Shashi Tharoor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!

பாஜகவுக்கு செலுத்தும் வாக்குகள் வீணாகும்! சசி தரூர்

கடன் மாதிரியாக மாறிய கேரள மாதிரி! சசி தரூர் விமர்சனம்

கேரள தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் எம்பிக்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


