கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விருப்பம் தெரிவித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் மும்முனைப் போட்டியாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை போட்டியிடுகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
”இது காங்கிரஸ் வெல்ல வேண்டிய தேர்தல் என்று நான் நினைக்கிறேன். எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது என்பதுதான் ஒரே பிரச்னை. ஆளும் தரப்பினரின் வேட்பாளர்கள் ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் என்பதால் அவர்கள் தயாராக குறைந்த நேரமே தேவைப்படும். ஆனால், எங்கள் கட்சி சார்பில் புதிய வேட்பாளர்கள் பலர் போட்டியிடவுள்ளனர். அவர்கள் வாக்காளர்களையும் தொகுதி மக்களையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஆளும் தரப்புக்கு எதிரான பிரசாரத்தை மட்டுமல்லாமல், கேரள எதிர்காலம் குறித்து நேர்மறையான கருத்துகளையும் நாங்கள் கொண்டுள்ளோம். இது வாக்காளர்களிடம் எதிரொலித்து, கூட்டணியின் வெற்றிக்கு உதவும் என நம்பிக்கை இருக்கிறது.
கேரள தேர்தலில் போட்டியிட இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். தனிப்பட்ட முறையில், அவர்கள் கட்சிக்கு பெரும் சொத்துக்கள் என்று நான் கருதுகிறேன். எனவே, அவர்கள் போட்டியிட விரும்பினால், அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இறுதி வேட்பாளர் பட்டியலை கட்சியின் மேலிடம்தான் தீர்மானிக்கும்” என்றார்.
Summary
Congress MPs who want to contest in Kerala elections! - Shashi Tharoor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள பேரவைத் தேர்தல்: வாக்களித்த எம்.பி.க்கள் சசி தரூர், ஜான் பிரிட்டாஸ்!

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!

பாஜகவுக்கு செலுத்தும் வாக்குகள் வீணாகும்! சசி தரூர்

கடன் மாதிரியாக மாறிய கேரள மாதிரி! சசி தரூர் விமர்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


