ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூன் 29) போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் திமுக மாணவரணி போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,
"பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதுபோல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பà¯à®¤à¯ à®à®à®¤à¯à®¤à®¿à®²à¯ பà¯à®¤à¯à®ªà¯ பà¯à®°à¯à®³à¯ பயனà¯à®ªà®à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯ பà¯à®² வà¯à®à®¿à®¯à¯ வà¯à®³à®¿à®¯à®¿à®à¯à® த.வà¯.à®. à®à®®à¯à®à¯à®à®°à¯ திரà¯. à®à®°à®¤à¯à®à¯à®®à®¾à®°à¯ à®à®µà®°à¯à®à®³à¯à®ªà¯ பதவி நà¯à®à¯à®à®®à¯ à®à¯à®¯à¯à®¯ வலியà¯à®±à¯à®¤à¯à®¤à®¿ தி.à®®à¯.à®. மாணவர௠à®à®£à®¿ à®à®¾à®°à¯à®ªà®¿à®²à¯ நà®à¯à®ªà¯à®±à®µà®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®°à¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ à®à®©à¯à®®à®¤à®¿ மறà¯à®¤à¯à®¤à®¤à¯à®à¯, à®à®´à®à®¤à¯à®¤à®¿à®©à®°à¯ à®à®°à®¾à®à®à®®à®¾à® à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯ தவà¯à® à®à®°à®à¯.
— Kanimozhi (à®à®©à®¿à®®à¯à®´à®¿) (@KanimozhiDMK) June 29, 2026
தà®à¯à®à®³à¯â¦
Summary
DMK MP Kanimozhi urges for a proper inquiry and action against Minister Sarathkumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி
சிறுமி பாலியல் துன்புறுத்தல்! நடவடிக்கை ஏதுமில்லை என்ற துணிச்சல்தான்: கனிமொழி

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?







