தமிழ்நாட்டில் அரசு என ஒன்று இருக்கிறதா? பெண்களே, உங்களையும் குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பேட்டை பகுதியல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாடகை வீடுகளில் தங்கி, அங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, படுகாயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பலியானது.
இது குறித்து காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்து, 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கனிமொழி எம்.பி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமி பாலியல் துன்புறுத்தல்! நடவடிக்கை ஏதுமில்லை என்ற துணிச்சல்தான்: கனிமொழி

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தவெக அரசு நிறுத்தி வைத்துள்ளது ஏன்? கனிமொழி







