தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் திமுக மாணவரணி போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”போதைப் பொருள் பயன்படுத்தியது போல், ”தக் லைஃப் ஸ்டோரி (Thug Life Story) போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
A false image - Chief Minister Vijay's vision will not last long – M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







