ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: பெண் பலி

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தது குறித்து...

woman dies

பெண் பலி - பிரதிப் படம்

Published On :28 ஜூன் 2026, 2:27 pm IST

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சசிகலா. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்ற சசிகலாவிற்கு வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்தனர்.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப் போக்கு நிற்காமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா, பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சசிகலா உயிரிழந்தார்.

ஏற்கனவே இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது ஊத்துக்குளி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Young woman dies after delivering baby at home in Tiruppur following YouTube videos

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.