போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஜோசப் விஜய், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை இன்று காலை தொடக்கிவைத்த முதல்வர் விஜய், மக்களோடு இணைந்து ஓடினார்.
தொடர்ந்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில், “ஓட தொடங்குங்கள், போதைப்பொருளை நிறுத்துங்கள், விளையாடத் தொடங்குங்கள் போதைப்பொருளை விடுங்கள்” (ஸ்டாப் ரன், ஸ்டாப் டிரக்ஸ், ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு) என்ற வாசகத்தை எழுதி, பிரியமுள்ள விஜய் எனக் கையெழுத்திட்டார்.
பின்னர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து இளைஞர்களுக்கு எக்ஸ் தளத்தில் அறிவுரை வழங்கியிருக்கும் முதல்வர் விஜய்,
“இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Sports-ah EDU Drugs-ah vidu! Chief Minister Vijay's advice to the youth!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் - புகைப்படங்கள்
இந்தியாவில் மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும்தானா?

சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan





