ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!

போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள் குறித்து...

முதல்வர்

முதல்வர் விஜய் - படம்: டிஎன்டிஐபிஆர்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:21 pm IST

'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையில், மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டு, 'போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்' விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.     

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஆக. 11) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர், முதல்வர் விஜய், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 'போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்' விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகளை காணொலி மூலம் பார்வையிட்டு, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

மேலும், போதைப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தலா 3 சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தலா 3 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். 

Summary

Students took a pledge at the 'Drug-free Tamil Nadu' event presided over by Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.