முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான புகாரில் நல்ல ஆதாரங்களுடன் சிக்கியிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதால் தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தவெக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், அவரின் குற்றச்சாட்டை மறுத்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, "முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது எந்தவித அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அவர் துணிச்சலோடும், சட்டரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும். அவரது நண்பர் ஜெகத்ரட்சகன் மீது சுமார் ரூ. 900 கோடி அபராதம் விதித்தபோது, கட்டிவிடுவதாக அவர் ஒப்புக்கொண்டார். அவரைப் போலாவது எ.வ. வேலு எதிர்கொள்ள வேண்டும்.
அவர் மீது வந்த புகாரின்பேரில்தான், துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல ஆதாரங்களோடுதான் அவர் சிக்கியிருக்கிறார். இப்போது ஒருவர் சிக்கியிருக்கிறார்; அடுத்து ஒவ்வொருவராக வர வேண்டும். தெரிந்தே தவறு செய்பவர்களை முதல்வர் விட மாட்டார்.
இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு அவருக்கு பலம் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
Summary
Forme Minister EV Velu caught with solid evidence, says Minister Rajmohan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









