ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இயற்கை அளித்த கொடைதான் முதல்வர் விஜய்: செங்கோட்டையன்

முதல்வர் விஜய் பற்றி அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்து...

Minister KA Sengottaiyan | CM Vijay

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் செங்கோட்டையன் - கோப்புப் படம்

Published On :26 ஜூன் 2026, 10:41 am IST

மக்களின் நலன்களுக்கான சிந்தனையோடு செயல்படுகிற ஒரே முதல்வராக விஜய் திகழ்வதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது, "ஜோசப் விஜய்யின் பெயரைச் சொன்னாலே சிலருக்கு அச்சம். நாட்டு மக்களின் நலன் காண்கிற முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு கொடையாக விஜய் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

செங்கோட்டையன் எங்கே செல்கிறார்? என எல்லோரும் கேலி பேசினார்கள். எம்ஜிஆரோடு பயணம் செய்தேன் - அவர் ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்தார். ஜெயலலிதாவுடன் பயணம் செய்தார் - அவரும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

இன்று தவெகவில் இணைந்து, ஆட்சி மாற்றப்பட்டிருக்கிறது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், இன்று எதிர்க்கட்சியிலே அமர்ந்து கொண்டிருக்கின்றனர்.

உலகில் வாழும் அத்தனை தமிழர்களும் அவரின் (விஜய்) பிறந்தநாளை தங்களுடைய பிறந்தநாளைப்போல கொண்டாடுகின்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் உள்ளங்களில் வாழ்கிற ஒரே தலைவர்தான் விஜய். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

மாநிலத்தின் நிதி நிலை எவ்வளவு நெருக்கடியாக இருந்தபோதிலும், மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

காலை 10 மணிக்குக் கோட்டைக்கு வந்தால், மாலை 4.30 வரையில் மக்களைச் சந்திப்பது. என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்ற சிந்தனையோடு செயல்படுகிற ஒரே முதல்வராக விஜய் திகழ்கிறார். அவரைத் தவிர வேறு யாராலும் முடியாது என வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Summary

Chief Minister Vijay is a gift from nature, says Minister KA Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.