திமுக நடத்திவரும் பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, "மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ. சண்முகம் குறித்து எழுதப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அது அநாகரிகத்தின் உச்சம்.
தன்னுடைய வாழ்வையும் வசதிகளையும் ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணித்த ஒரு மாமனிதர்தான் பெ. சண்முகம்.
காவிரிக் கரையோரத்தில் பிறந்து, சிவப்புத் துண்டைத் தோளில் ஏந்தி அவர் களமாடியதையும், போராடியதையும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது. அவர் செய்தவற்றையெல்லாம் ஒரு மனிதனால் ஒரே ஆயுளில் செய்ய முடியாது.
விமர்சனம் யார் வேண்டுமானாலும் செய்யலாம், அரசியல் முரண்பாடு இருக்கலாம். டானிக் குடித்து வளர்ந்தவர் என்று எழுதியிருக்கின்றனர். அவர்களை மாதிரி டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவரா அவர்?
அரசியல் என்பது நாகரிகத்தில் எல்லையில் நிற்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், அவரே இதனைக் கண்டித்திருப்பார்.
சி.வி. சண்முகமும் பெ. சண்முகமும் ஒன்று எழுதுகிறார்கள் என்றால், எவ்வளவு பெரிய வன்மம். அதிமுகவில் களமாடி வரும் சி.வி. சண்முகத்தை ஏசுவதற்கும் சிறுமைப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். அப்படியெனில், சி.வி. சண்முகம் குறித்த உங்களின் மதிப்பீடு என்ன? இதற்கு தவெக சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.
இதுபோல சிவப்புத் துண்டைச் சிறுமை செய்தால், இரட்டைப் போர் யானை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அனைவரும் நாகரிகத்தின் எல்லையைக் கருதி, அதோடு நிற்க வேண்டியது கடமை" என்று தெரிவித்தார்.
Summary
Defamatory article about CPM Secretary P. Shanmugam? Minister Rajmohan condemns it
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









