தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் சட்டமன்றக் கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு , திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
எனினும் யார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என்றும், எந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையானத் தகவல் வெளியாகவில்லை.
சோதனைக்குப் பிறகு இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல்முறையாக திமுக அமைச்சர் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Anti-Corruption Department raids E.V. Velu's house and office
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை







