ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

'நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? முதல்வர் பதில் சொல்ல வேண்டும்! உதயநிதி

பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி...

Why are abandoning the Naan Mudhalvan scheme, Udhayanidhi stalin asks to CM vijay

உதயநிதி ஸ்டாலின் - TN Assembly

Published On :22 ஜூன் 2026, 3:16 pm IST

'நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? என்று முதலமைச்சர் பதில் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பேரவையில் இன்று பேசிய அவர்,

"முதல்வர் விஜய்க்கு திமுக எம்எல்ஏக்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இருமுறை தேசிய கீதம் இசைக்கப்பட்டது ஏன்? சட்டப்பேரவையின் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுக்கும் அளவுக்கு என்ன சமரசம் நடந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பேரவைத் தலைவர், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது என்பதில் எந்த தவறும் இல்லை. அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறினார்.

உதயநிதி, "தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. அதேபோல தமிழ்த்தாய் வாழ்த்தும் இருமுறை பாடச் சொல்லியிருக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று நினைக்கிறதா தவெக அரசு?" என்றார்.

"ஆளுநருடன் எந்த சமரசமும் இல்லை. முதல்முறையாக ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆளுநர் வெளியேறியபிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

மேலும் பேசிய உதயநிதி, "ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் 'முதல்வன்' ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தை உருவாக்கினோம். அதனை முடக்கும் முயற்சி நடைபெறுகிறது.

நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன்? நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி போன்ற தேர்வர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த யுபிஎஸ்சி தேர்வில் 60ல் 56 பேர் இத்திட்டத்தால் பயன்பெற்றவர்கள்.

இத்திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது. திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதலமைச்சர் விஜய் பதில் செல்ல வேண்டும்.

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார். பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம் ஆகியவை சிறப்பாக உள்ளதாகக் கூறுகிறார். இந்த சாதனைகள் எல்லாம் யார் ஆட்சியில் நடந்தது என்று முதல்வருக்கும் மக்களுக்கும் தெரியும். திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டுகிறது" என்று கூறினார்.

Summary

Why are abandoning the Naan Mudhalvan scheme, Udhayanidhi stalin asks to CM vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.