அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

புதிய காவிரி நடுவர் மன்றம் ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்

புதிய காவிரி நடுவர் மன்றத்தை திமுக முன்மொழிந்தது ஏன்? என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

News image

தங்கம் தென்னரசு

Updated On :22 ஜூன் 2026, 12:22 pm IST

புதிய காவிரி நடுவர் மன்றத்தை திமுக முன்மொழிந்தது ஏன்? என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் அவர் அளித்த விளக்கத்தில், மேகேதாட்டுவில் அணைக் கட்டக்கூடாது என பலமுறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகேதாட்டுவில் அணை என்பதில் உறுதியாக உள்ளனர்.

மேகேதாட்டு விவகாரத்தை கவனமாக கையாளவில்லை என்றால் மத்திய அரசு அதிகாரிகள் கைகளுக்குச் சென்றுவிடும். காவிரி விவகாரத்தில் தற்போது எழுந்திருப்பது புதிய பிரச்னை. சட்ட சிக்கலில் தமிழ்நாடு சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே புதிய காவிரி நடுவர் மன்றம்.

புதிய நடுவர் மன்றம் அமைப்பதே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கும். புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏற்கெனவே உள்ள தீர்ப்பை எந்தவகையிலும் பாதிக்காது. மேகேதாட்டு விவகாரத்தில் ஒற்றுமையின்மை ஏற்பட்டால் கர்நாடகத்துக்கு சாதகமாகிவிடும்.

மேகேதாட்டு விவகாரத்தில் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். மேகேதாட்டு அணை பிரச்னையை, பெங்களூருக்கான குடிநீர் பிரச்னை என கர்நாடகம் தனியாக கொண்டு சென்று வெற்றி பெற வாய்ப்பு உருவாகிவிடும். அதனை தடுத்து நிறுத்த புதிய நடுவர் மன்றம் மூலமாக எதிர்கொள்வதுதான் சாலச்சிறந்தது. இவ்வாறு தெரிவித்தார்.

Summary

DMK MLA Thangam Thennarasu has explained why the DMK proposed the new Cauvery Tribunal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.