குஜராத் மாநிலத்தைவிட தமிழ்நாடு அரசு அதிக வட்டி கட்டுவதாக வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
அப்போது, வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்து, ரூ. 10 லட்சம் கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், திமுக அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது குஜராத் மாநிலத்தைவிட தமிழ்நாடு அரசு அதிக வட்டி கட்டுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து பேசியதாவது:
”குஜராத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, காலை உணவுத் திட்டம், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியங்கள், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற நலத்திட்டங்கள் குஜராத்தில் செய்யவில்லை. இதன் காரணமாகதான் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையில் செலவு செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் இலவச சிலிண்டர்கள், இலவச மின்சாரம், வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகை, கூட்டுறவு கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 என பல வாக்குறுதிகளை அளித்துள்ளீர்கள். இதையெல்லாம் மூலதனச் செலவீனத்தில் இருந்து செலவு செய்வோம் என்று கூறுனீர்களா? சிங்கப் பெண் அதிரடிப் படை மூலதனச் செலவீனத்தில் இருந்துதான் தொடங்குனீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Summary
Why does Tamil Nadu pay higher interest than Gujarat? Thangam Thennarasu explains!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!

மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு!

இயலாமையை மறைக்க வெள்ளை அறிக்கை நாடகம்: தங்கம் தென்னரசு

ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




