தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு கூடியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
அமோனியா வாயு கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலில் பேச அனுமதிக்காமல் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க பேரவைத் தலைவர் அழைத்ததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சரின் விளக்கத்திற்கு முன் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
Gas leak: DMK and AIADMK MLAs create an uproar in the Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாலியல் குற்றங்கள் பற்றி வாய் திறக்காத முதல்வர்! திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு எதிர்ப்பு!
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸ்! - மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்

திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா? ஆர்.எஸ். பாரதி பதில்!







