
தமிழ்நாடு
இன்றைய செய்திகள் ஜூன் 21 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

யோகா நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: பிடிஐ
வாழ்க்கைக்கு இன்றியமையாதது யோகா: பிரதமர் மோடி பேச்சு!
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பங்கேற்று உரையாற்றினார்.
சொல்லப் போனால்... கவிஞர் கண்ணதாசனைக் கொண்டாடுவோம்!
ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டையொட்டி...
மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பயண டோக்கன்! எங்கெல்லாம் வழங்கப்படும்?
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யோகாவை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றுவோம்: ராஜ்நாத் சிங்
யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தெரிவித்தார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,790 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) குறைந்தது.
மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
உத்தரமேரூர் அருகே தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் படத்தைக் காட்டி அறிவுரைகள் வழங்குவது போன்று ரீல்ஸ் எடுத்தது, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில், தவெகவில் இருந்து ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளார்.
திரையில் விஜய்யின் அரசியல் - இயல்பானதா? திட்டமிடப்பட்டதா?
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... திரைப்படங்களில் விஜய்யின் நடிப்பில் அரசியல் செயற்பாடுகள் பற்றி...
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்!
பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணி
மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு: மாணவர்கள் அச்சம் பதற்றமின்றி தேர்வெழுத வேண்டும்: தர்மேந்திர பிரதான்
நீட் மறுதேர்வை மாணவர்கள் அச்சமின்றியும் பதற்றமின்றியும் எழுத வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை: நயினார் நாகேந்திரன்
முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் மறுதேர்வு தொடங்கியது!
நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடையும்.
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் வாயு கசிவால் மயக்கமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் வாயு கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.
5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் அம்மோனியா கசிவு சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார் இன்று (ஜூன் 21) தெரிவித்தார்.
அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு சிகிச்சையை உறுதி செய்ய ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று (ஜூன் 21) ஆய்வு மேற்கொண்டனர்.
அம்மோனியா வாயு கசிவால் மறு அறிவிப்பு வரும் வரை ஆலை செயல்பட அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், ஆலையின் உள்பட்டமைப்புகள், இயந்திரங்களின் தரம் உள்ளிட்டவைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீட் மறுதேர்வு நிறைவு! எந்த பாடம் கடினம்? மாணவர்கள் கருத்து
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நிறைவு பெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.
அநீட் மறுதேர்வு எளிமையா? கடினமா?
நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடந்து முடிந்துள்ளன. நீட் தேர்வுக்கான கேள்விகள் கடினமாக இருந்தனவா? எளிமையாக இருந்தனவா என்ற கேள்வி எழுவது வழக்கமானது.
ஆனால், இம்முறை பெரும்பாலான மாணவர்கள் நீட் மறுதேர்வே கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட தேர்வானது, மறுதேர்வை ஒப்பிடும்போது எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies






















