திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் இன்று (ஜூன் 21) தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்தனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை அமைச்சர் பர்வேஸ் குமார் இன்று நேரில் சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:
அம்மோனியா வாயு கசிவால் துயரமான சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை முதல்வருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை தரப்பில் விரிவான விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 60 பெண்கள், 4 ஆண்கள் வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
அம்மோனியா கசிந்து விபத்து
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த சுமார் 40 பேர் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அதேசமயம் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
Thiruvallur Ammonia gas leak incident: Factory owner arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 21 - நேரலை!

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

வாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு சிகிச்சை! ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் உத்தரவு!

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




