ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமோனியா வாயு கசிவு! 43 பேருக்கு தொடர் சிகிச்சை!

அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டோர் நிலை குறித்து சுகாதாரத்துறை விளக்கம்.

Ammonia gas leak

43 பேருக்கு தொடர் சிகிச்சை - கோப்புப்படம் (EPS)

Published On :26 ஜூன் 2026, 10:12 am IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 43 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.

இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது.

இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பலியானோர் எண்ணிக்கை நேற்றிரவு 13 ஆக உயர்ந்தது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அளித்திருக்கும் விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

”திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 43 பேர் தற்போது வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேரின் சடலங்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரின் சடலங்கள் ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Ammonia gas leak - 43 people undergoing continued treatment!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.