விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது குறித்து...

News image

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் - DNS

Updated On :17 ஜூன் 2026, 6:44 pm IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளதையொட்டி, திமுக உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை (ஜூன் 18) தொடங்கவுள்ளது. முதல் நாளில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றவுள்ளார். மறு​நாள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்​மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.

இதனிடையே ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசுவது குறித்து திமுக எம்​எல்ஏக்களுக்கு ஆலோ​சனை வழங்கும் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.க. ஸ்டா​லின் தலை​மையில் தொடங்கியது.

இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, துணைத் தலைவர் நேரு, கொறடா எ.வ.வேலு உள்பட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியின் வியூகங்களை சட்டப்பேரவையில் திறம்பட எதிர்கொள்வது, எதிர்க்கட்சியாக திமுக உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Summary

The meeting of DMK MLAs has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.