திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி நடப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அவரின் பேச்சுக்கு தவெக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜ்மோகன் பேசியதாவது, "மு.க. ஸ்டாலின் அப்படி கூறியிருக்கக் கூடாது. அதனை அவர் தவிர்த்திருக்கலாம்.
நம்மைப் பொருத்தவரையில், சொன்னபடியே கூட்டணியில் இருப்பவர்களுக்கும் அமைச்சரவையில் முதல்வர் விஜய் இடம் அளித்திருக்கிறார்.
அமைச்சர் வன்னி அரசுக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருப்பது, தனி மனிதனுக்கானது அல்ல; அது நீண்ட, நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான ஓர் அங்கீகாரம்.
அதுபோல, இந்திய விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக இந்திய முஸ்லீம் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது. இது குரலற்றவர்களுக்கு குரலாக இருப்பதற்கான அடையாளம்.
கூட்டணி என்கிற பெயரில், அவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு, அவர்களின் வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு, அவர்களுக்கான அங்கீகாரத்தை மட்டும் இவ்வளவு காலமாக தராமல் இருந்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் இதனை முதன்முறையாக முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.
Summary
TVK Minister Rajmohan responds to DMK Chief MK Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸ்! - மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
DMK Vs TVK | முன்னாள் முதல்வருக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்! | MKStalin






