இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்

அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2026, 1:57 am IST

தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 11-ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தொழில்துறை அமைச்சா் ச.கீா்த்தனா முதல்வா் ஜோசப் விஜய்யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

இது, மாநிலத்தில், விண்வெளி உற்பத்திக்கான உலகத்தர சூழலை உருவாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான உபகரணங்களை வழங்கும்.

தமிழ்நாடு அரசு தேவைப்படும் நிலத்தை வழங்கி அதில் கட்டடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தும்.

இந்தமையம், அதிா்வு, அதிா்ச்சி, வெப்ப-வெற்றிடம், மின் சாா்ந்த குறுக்கீடு,ஒத்திசைவு, அழுத்தம் மற்றும் ஓட்டம், சோதனை, ஏவுகணை வாகன கூட்டமைப்பு, உதிரிப்பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஹைட்ரோக்ளேவ் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கான அதிநவீன சோதனை மற்றும் தரநிலை உறுதிப்படுத்தும் வசதிகளை பயன்பாட்டிற்கு வழங்கும்.

அதிக முதலீட்டுடன் அமைக்கப்படும் வசதிகள், தொழில்துறைக்கு விண்வெளி அமைப்புகள் மற்றும் உதிரிபாகங்கள் உருவாக்க, சோதிக்க, தரநிலை உறுதிப்படுத்த ஆகும் செலவையும் மற்றும் நேரத்தையும் குறைக்க உதவும்.

குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ஏவுகணை தளம் அருகில் இந்த மையம் உருவாக்கப்படவுள்ளது.

இந்த இவ்வசதி, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாக நிலைநிறுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது, உலக விண்வெளி உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் கனவுக்கு முக்கிய பங்களிப்பாக விளங்கும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.