5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

போக்குவரத்துத் துறை! ஒரு கி.மீ. தொலைவுக்கு பேருந்தை இயக்க செலவும் - வருவாயும்!

போக்குவரத்துத் துறையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு பேருந்தை இயக்க செலவும் வருவாயும் ஒப்பீடு

News image

பேருந்துகள் இயக்கம் - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 7:01 pm IST

தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை, மின் சாரத் துறை போன்ற மிக முக்கியத் துறைகள் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக தமிழக அரசு இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு மொத்த இழப்பு ரூ.72,667 கோடியாக உள்ளது.

அதாவது, போக்குவரத்துத் துறையில் ஒரு பேருந்தை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்குவதற்கு தமிழக அரசு செய்யும் செலவு (எரிபொருள், ஓட்டுநர், நடத்துநர் செலவு, பேருந்து செலவினம்) ரூ.78.81. ஆனால், அதே ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேருந்தை இயக்கி அதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ரூ.25.97 ஆக உள்ளது.

இந்த வகையில், ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் பேருந்துகளை இயக்க ஒவ்வொரு பேருந்துக்கும் கிட்டத்தட்ட ரூ.52 அளவுக்கு தமிழக அரசு கூடுதலாக செலவிட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.